ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஸ்டேட் பாங்க் குழுமத்தில் 1717 புரபேஷனரி ஆபீஸர் வேலைவாய்ப்பு


ஸ்டேட் பாங்க் குழுமத்திலுள்ள துணை வங்கிகளில் காலியாகவுள்ள 1717 புரபேஷனரி ஆபீஸர்ஸ் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கான அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு வரும் மார்ச் 7ம் தேதியன்று நடத்தப்படும். ஆன்லைனிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை ஆன்லைனில் இந்த முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த குழுமத்திலுள்ள 6 வங்கிகளில் புரபேஷனரி ஆபீஷர் பணியிடங்கள் உள்ளன. பொதுப்பிரிவினர் மொத்தமே 4 தடவை மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஓ.பி.சி., பிரிவினர் 7 தடவையும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் வரையறை இல்லாமலும் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

அனைத்து வங்கிகளிலுள்ள காலியிடங்களுக்குமாக சேர்த்து ஒரே ஒரு போட்டித் தேர்வு தான் நடத்தப்படும். போட்டியாளர்கள் 6 வங்கிகளில் 3ஐ தங்களது விருப்பமாக குறிப்பிட வேண்டும்.

தகுதிகள்:

குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2ல் 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம். பட்டப்படிப்பில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருந்தால் போதும்.

வயது: 31.1.2010 அன்று 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை தரப்படும். உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

தேர்வு முறை:

வழக்கமாக புரேஷனரி ஆபீஸர்ஸ் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வு இதற்கும் நடத்தப்படும். ஆங்கிலம், பொது அறிவு-மார்க்கெட்டிங்-கம்ப்யூட்டர் திறன், டேட்டா அனலிசிஸ் அண்ட் இன்டர்பிரடேசன், ரீசனிங் ஆகிய பகுதிகளில் அப்ஜக்டிவ் முறையிலான தேர்வு நடத்தப்படும். இந்தப் பகுதிக்கு 2 மணி நேர கால அவகாசம் தரப்படும்.

இதன் பின் ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்படும் விரிவாக விடையளிக்கும் பகுதியில் ஆங்கிலத் திறனறியும் கேள்விகள் இடம் பெறும். இதில் கட்டுரை வரைதல், கடிதம் வரைதல், சுருக்கி வரைதல் மற்றும் Comprehension ஆகிய பகுதிகள் இடம் பெறும்.

இரண்டு பகுதிகளிலும் பெறும் மதிப்பெண்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேர்வு மையங்கள்:

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் இத் தேர்வை எழுதலாம்.

இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோருக்கு ரூ.50. இந்த கட்டணத்தை ஸ்டேட் பாங்கின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் பின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க…

www.statebankofindia.com , www.sbi.co.in ஆகிய இணைய தளங்களில் ஒன்றில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தையும் ரசீதையும் ஜெராக்ஸ் செய்து உங்களிடமே வைத்துக் கொள்ள வேண்டும்.

இதை தேர்வுக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜனவரி 31, 2010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக