செவ்வாய், 12 ஜனவரி, 2010
3 இந்தியர்களை இறக்கி விட்டது கேத்தே பசிபிக் விமான நிறுவனம்
பெய்ஜிங் : ஓசியில் கிடைத்தால் பினாயிலை கூட லிட்டர் கணக்கில் குடிப்பார்கள் நம்ம ஆட்கள். அதிலும் மது கிடைத்தால் கேட்கவே வேண்டாம். வயிறு முட்டக் குடித்துவிட்டு விமானத்தில் குடிபோதையில் பணிப்பெண்களிடம் தகராறு செய்தனர் 3 இந்தியர்கள். ஆட்டம் ஓயாமல் தொடர்ந்ததால், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் ஹாங்காங் விமான நிலையத்தில் நடந்துள்ளது.
கேத்தே பசிபிக் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், இரவு 10.30 மணிக்கு ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அதில் முதல் வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த 3 இந்தியர்கள், விமான நிலைய லாபியில் மது அருந்தினர். அங்குள்ள பாரில் இருந்த பெண் ஊழியரிடம் மேலும் மேலும் மது சப்ளை செய்ய கேட்டனர். ஏற்கனவே அவர்கள் அளவுக்கு மீறி குடித்திருந்ததால் மது சப்ளை செய்ய பார் ஊழியர் மறுத்தார். அதற்குள் விமானம் புறப்படும் நேரம் நெருங்கவே, Ôசரி.. விமானத்தில் பார்த்துக் கொள்வோம்Õ என 3 இந்தியர்களும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். போதை குறைவது போல் தெரியவே அங்கும் பணிப்பெண்ணிடம் மது கேட்டனர். விமானத்தில் ஏறியதில் இருந்தே மப்பில் இருந்த அவர்களுக்கு மது தர அவரும் மறுத்தார். இதையடுத்து இந்தியில் பணிப்பெண்ணை தரக்குறைவாக விமர்சித்தனர். தொடர்ந்து விழுந்து எழுந்து அமளி செய்தனர். பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர்.
இதையடுத்து விமானம் அரை மணி நேரம் தாமதமானது. எனினும், அவர்களது அமளி ஓயாததால் பணிப்பெண்கள் பைலட்டிடம் புகார் செய்தனர். பைலட்டின் உத்தரவை ஏற்று 3 இந்தியர்களும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்களில் ஒருவர் தூதரக அதிகாரிக்கான பாஸ்போர்ட் வைத்திருந்தார். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதும், தனது பாஸ்போர்ட்டைக் காட்டி, கேத்தே பசிபிக் நிறுவனம் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரித்தார்.
இதுபற்றி அந்த விமானத்தில் பயணம் செய்த டெல்லியைச் சேர்ந்த பயணி கூறுகையில், ÔÔஇதுபோன்ற சிலரால் வெளிநாடுகளில் இந்தியாவின் பெயர் கெடுகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் போட்ட ஆட்டத்தை சகிக்க முடியவில்லைÕÕ என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக