வியாழன், 7 ஜனவரி, 2010
இந்திய ஐடி ஊழியர்களால் லண்டன் இளைஞர்கள் அச்சம்
லண்டன் : இங்கிலாந்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஐடி ஊழியர்களால் உள்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளைச் சேராத 30,000 ஐடி ஊழியர்கள், இங்கிலாந்துக்கு பணி மாறுதலில் அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.
அதேபோல, மற்ற துறைகளையும் சேர்த்து 45,000 பேர் இங்கிலாந்துக்கு வந்தனர். ஐடி அல்லாத 15,000 பேரிலும் இந்தியர்களே அதிகம்.
2008ம் ஆண்டில் ஐடி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த 15,400 பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு பணி மாறுதலாகி வந்தனர். ஆனால், 2009ல் அது 45,000 ஆக அதிகரித்ததால் இங்கிலாந்து இளைஞர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதே திறமை, பதவிக்கு இங்கிலாந்து இளைஞர்களுக்கு அதிக ஊதியம் தர வேண்டியிருக்கும் என்பதால், குறைந்த சம்பளத்தில் இந்திய இளைஞர்கள் லண்டன் அனுப்பப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதனால், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட ஐடி ஊழியர்களில் டிசிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். 4,465 ஊழியர்களை அந்நிறுவனம் கடந்த ஆண்டில் இங்கிலாந்து அனுப்பியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக