புதன், 13 ஜனவரி, 2010

4,054 காவலர்கள் தேர்வு


சென்னை : தமிழக காவல் துறைக்கு 2,801 ஆண் காவலர்களும், 1,253 பெண் காவலர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2,800 ஆண் காவலர்கள், 1,200 பெண் காவலர்கள் என மொத்தம் 4000 ஆயிரம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின்னடைவு காலி பணியிடங்களாக இஸ்லாமியரில் ஒரு ஆண் காவலரும், 46 பெண் காவலர்களும், பழங்குடியினரில் 10 பெண் காவலர்களும் ஆக 57 பேர் என மொத்தம் 4,057 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்காக, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் தமிழகம் முழுவதும் அண்மையில் தேர்வுகளை நடத்தியது.

இந்த தேர்வின் மூலம் தற்போது 2,801 இரண்டாம் நிலை ஆண் காவலர்கள், 1,253 இரண்டாம் நிலை பெண் காவலர்கள் என மொத்தம் 4,054 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய காரணத்தினால் 99 இஸ்லாமிய ஆண்களும், 85 இஸ்லாமிய பெண்களும், அருந்ததியர் சமுதாயத்துக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் 84 அருந்ததிய ஆண்களும், 36 அருந்ததிய பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக