செவ்வாய், 5 ஜனவரி, 2010
பொதுத்துறை வங்கிகளில் 40 ஆயிரம் வேலை காலி
புதுடெல்லி : பொதுத் துறை வங்கிகளில் ரிடையர்மென்ட், ராஜினாமா மற்றும் புதிய கிளைகள் திறந்தது காரணமாக 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் மொத்தம் 6 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இதில் ஸ்டேட் வங்கியில் மட்டுமே 2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கனரா வங்கியிலும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டில் ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்றனர். பலர் வேலையை ராஜினாமா செய்தனர். அதோடு எப்போதும் இல்லாத வேகத்தில் புதிதாக கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வங்கிச் சேவையை அதிகரிக்க இதுதான் சரியான நேரம். எனவே புதிய ஊழியர்களுக்கான தேவை பெரிதும் அதிகரித்துள்ளது என பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொத்தம் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களில், 19 ஆயிரம் பணியிடங்கள் எஸ்பிஐ&யில் உள்ளன. சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் தலா 3 ஆயிரம் வேலைகள் காலியாக உள்ளன.
இந்தியன் வங்கி, யூகோ பாங்க், பஞ்சாப் சிந்த் வங்கி, ஓரியண்டர் பாங்க், யூனியன் பாங்க், பரோடா வங்கி போன்றவற்றிலும் தலா 1000 வேலைகளுக்கு மேல் காலியாக உள்ளது. இவை அனைத்தையும் இந்த ஆண்டு நிரப்ப இந்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக