வியாழன், 14 ஜனவரி, 2010

பிப்.14 காதலர் தின கொண்டாட்டம் உலக காதலர்களை மயக்கும் ஓசூர் ரோஜா


ஓசூர்: காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 4 கோடி ரோஜா மலர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம், கடல் மட்டத்தை விட 1500 அடி உயரத்தில் உள்ளது. எல்லா மாதங்களிலும் சீரான தட்பவெப்பம் நிலவுவதால் இங்கு காய்கறிகள், ரோஜா மலர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3125 ஏக்கர் நிலப்பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது. இதில், 700 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை குடில் அமைத்து மலர் உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஹாலந்து, போலந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலே சியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குறிப்பாக, பஸ்ட் ரெட், கிராண்ட் கால், தாஜ்மகால், நோப்ளஸ், ஆலிவுட் போன்ற மலர்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக விவசாயி ராமச்சந்திரப்பா தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பசுமை குடில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடனுக்கு அரசு 50 சதவீத மான்யம் அளிக்கிறது. சிறு பசுமை குடில் விவசாயிகளிடம் குளிர் பதன வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால், தரமான பூக் களை உற்பத்தி செய் தாலும் அவர்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. முழுக்க, முழுக்க உள்நாட்டுச் சந்தையையே நம்பியுள்ளனர். ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அவர்களால் மலர் உற்பத்தியும் செய்ய முடியவில்லை. எனவே அரசு கூட்டுறவு முறையில் விவசாயிகளிடம் நேரடி யாக பூக்களை வாங்கி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலர் தினத்தையொட்டி சுமார் 4 கோடி மலர்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் மட்டும் சுமார் ரூ. 60 கோடி வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுத் தால் ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் சுமார் 6 கோடி மலர்களை எங்க ளால் ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு விவ சாயி ராமசந்திரப்பா தெரிவித்தார். நீளமான காம்புள்ள பூக்கள் அதிக விலைக்கு விற்கப்படும். ஒரு மீட்டர் நீளம் காம்புடன் இருக்கும் ரோஜா பூ ஒன்று ரூ. 17 க்கு விற்கப்படுகிறது. குட்டை காம்புடைய பூ ரூ. 10க்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக