வெள்ளி, 1 ஜனவரி, 2010
பாரில் போலீசுக்கு கும்மாங்குத்து கம்பி எண்ணாமல் தப்பினார் டெய்லர்
கிங்ஸ்டன்: பாரில் தகராறு செய்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டெய்லர், புத்தாண்டில் கம்பி எண்ணாமல் தப்பினர்.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜெரூம் டெய்லர். இவர் ஜமைக்கா நாட்டின் செயின்ட்எலிசபத் நகரில் உள்ள ஒரு மதுபாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். பார் மூடும் நேரத்திற்கு பிறகும் மது கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் மறுத்துவிட்டனர். போதையில் இருந்த டெய்லர், ஊழியர்களிடம் தகராறு செய்தார். பிரச்னை பெரிதாகவே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் விசாரனை செய்தனர். அப்போது போலீஸ் ஒருவரை டெய்லர் கடுமையாக தாக்கினார். இதையடுத்து, டெய்லர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டெய்லரை 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் போலீசார் விடுதலை செய்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக