செவ்வாய், 5 ஜனவரி, 2010

ஜெனிலியா திருமணம் காதலனை மணக்கிறார்.


மும்பை : ஜெனிலியாவுக்கும் அவரது காதலரும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகன் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜூலை மாதம் திருமணம் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘பாய்ஸ்’, ‘சச்சின்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்‘ உட்பட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் 2003&ம் ஆண்டு ‘துஜே மேரி கசம்‘ என்ற இந்தி படத்தில் நடித்த போது, இவருக்கும் படத்தின் ஹீரோ ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. ரித்தேஷ், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மகன்.

கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், அதை மறுத்துவந்தனர். இந்நிலையில் இவர்களது பெற்றோர் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமணம் ஜூலை மாதம் நடக்கிறது.

குறித்து ஜெனிலியாவிடம் கேட்டபோது, ‘அவர் மறுத்தார். இப்போதைக்கு திருமணம் இல்லை. அது தவறான தகவல்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக