புதன், 19 மே, 2010

ஐசிஐசிஐ வங்கியுடன் பேங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைப்பு!


மும்பை: பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கி,​​ ஐசிஐசிஐ வங்கியுடன் இணைக்கப்படவுள்ளது.

ராஜஸ்தான் வங்கியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தயாள் குடும்பத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த இணைப்புக்கு இரு வங்கிகளின் இயக்குனர்கள் குழுக்களும் அனுமதி அளித்துவிட்டன.

ஏற்கனவே தமிழ்நாட்டின் பேங்க் ஆஃப் மதுரை , மகாராஷ்டிராவி்ன் சங்லி வங்கி ஆகியவற்றை ஐசிஐசிஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

பேங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கிக்கு நாடு முழுவதும் 500 கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்கு ரூ. 6.5 கோடி என்ற விகிதத்தில் இந்த வங்கியை ஐசிஐசிஐ வாங்கவுள்ளது.

பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் தற்போதைய பங்கு மதிப்பை விட அதிகமாகத் தர ஐசிஐசிஐ வங்கி முன்வந்ததைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 1.45 சதவீதம் சரிந்தது.

அதே நேரத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு விலை 19.95 சதவீதம் அதிகரித்துள்ளது.

பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்குகளை 10 ஆண்டுகளுக்கு முன் தயாள் குடும்பத்தினர் வாங்கினர்.​ மிகவும் பழமை வாய்ந்த இந்த வங்கியை பெரிய வங்கியுடன் இணைக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு பரிவர்த்தனை மையம் ​(செபி)​ ஆகியவை தயாளுக்கு நெருக்கடி அளித்து வந்தன.

மேலும் கடந்த மார்ச் மாதத்தில் பேங்க் ஆஃப் ராஜஸ்தானின் பங்கு பரிவர்த்தனைக்கு செபி தடை விதித்தது.​ மேலும் ரிசர்வ் வங்கி ரூ.​ 25 லட்சம் அபராதமும் விதித்தது.​

அத்துடன் ரிசர்வ் வங்கியே இந்த வங்கிக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியையும் ​(சிஇஓ)​ நியமித்தது.​ மேலும் வங்கியின் இயக்குநர் குழுவில் 5 ரிசர்வ் வங்கி இயக்குனர்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டனர்.

Read: In English
இதுபோன்ற நெருக்குதல்களை சமாளிக்க முடியாமல் வங்கியை விற்கும் முடிவுக்கு வந்துள்ளது தயாள் குடும்பம்.​

இந்த வங்கியை வாங்க ஸ்டேட் வங்கியும் போட்டியிட்டது. னால், ஐசிஐசிஐ வங்கி அளித்த தொகை அதிகமாக இருந்ததால் அதை தயாள் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் விற்க முன்வந்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக