புதன், 16 பிப்ரவரி, 2011

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியத்தை அமெரிக்க ரேடியோ வெளியீடு!


நியூயார்க்: 125 ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்ட கோகோ-கோலாவின் பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 1886-ம் ஆண்டு தான் கோகோ-கோலா முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

கோகோ-கோலா விற்பனையாகத் துவங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்யேக சுவை அளிக்கும் பார்முலாவை தெரிந்து கொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் பார்முலா பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட பார்முலாவை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன்.

இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலாவின் அதிகாரப்பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும் தான் அந்த பார்முலா தெரியும் என்று கூறப்படுகின்றது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயனிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலம் தான் ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக