செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் இ‌ன்று மு‌த‌ல் பரு‌ப்பு ரூ.30, பாமா‌யி‌ல் ரூ.25‌க்கு ‌‌வி‌‌ற்பனை!


நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு ‌கிலோ உளு‌த்த‌ம் பரு‌ப்பு, துவ‌‌ர‌ம் பரு‌ப்பு 30 ரூபா‌ய்‌க்கு‌ம், ஒரு ‌‌லி‌ட்ட‌ர் பாமா‌யி‌ல் 25 ரூபா‌ய்‌க்கு‌ம் இ‌ன்று மு‌த‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌மிழக‌ம் முழுவ‌து‌ம் 30 ஆ‌யிர‌ம் ‌நியாய‌விலை கடைக‌ளி‌‌ல் இ‌ன்று முத‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌டு‌கிறது.

இத‌‌ற்கு மு‌ன் ‌நியாய‌விலை கடைக‌ளி‌ல் ஒரு‌ ‌கிலோ உரு‌த்த‌ம் பரு‌ப்பு, துவர‌ம் பரு‌ப்பு 40 ரூபா‌‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு வ‌ந்தது. 30 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமா‌யி‌ல் இ‌ன்று 25 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெளிச்சந்தையில் முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ. 63இல் இருந்து ரூ.73க்கும், 2ம் ரக துவரம் பருப்பு ரூ. 55இல் இருந்து ரூ. 65க்கும் விற்பனையாகிறது.

இதே போல் கிலோ ரூ. 63க்கு விற்பனையான முதல் ரக உளுத்தம் பருப்பு ரூ.68‌க்கும், ரூ. 58க்கு விற்பனையான 2ஆம் ரக உளுத்தம் பருப்பு ரூ. 63க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனையான பாமாயில் இப்போது ரூ.64க்கு விற்பனையாகிறது என்பது குறிப்படத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக