வியாழன், 3 பிப்ரவரி, 2011

நாலணா காசு காணாமல் போகிறது!


கால் ரூபாய் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு, பின் நாலணா என்றாகி பல பத்தாண்டுகள் புழக்கத்தில் இருந்த கிராமப் பணமான 25 காசு நாணயம் வரும் ஜூன் மாதம் இந்திய பொருளாதாரத்தில் இருந்து ஓய்வு பெறுகிறது.

25 காசு நாணயத்தை வரும் ஜூன் மாதம் வரை ஏற்றுக்கொள்ளுமாறு வங்கிகளையும் தனியார் நிதியமைப்புகளையும் இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) கேட்டுக்கொண்டுள்ளது.

25 பைசா நாணயமும், அதற்கும் குறைவான காசுகளும் ஜூன் மாதத்துடன் பயனில் இருந்து நீக்கப்படுகின்றன. நமது நாட்டில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒரு மிட்டாய் வாங்குவதற்குக் கூட போதுமானதாக இல்லாத நாணயமாக 25 பைசா ஆகிவிட்டது. இந்த நிலையில் இதற்கு மேலும் அதனை பயன்பாட்டில் வைத்திருப்பதில் பொருளில்லை என்று மைய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, 50 காசிற்கு குறைவான சில்லரையை சிறு வணிகர்களும் அளிக்க மறுத்துவிடுவதாலும் (50 காசுக்கும் இதே நிலைதான்...தமிழ்நாட்டுப் பேருந்தில்), 25 காசு நாணயம் அடிக்க ஆகும் உலோக செலவு அதன் மதிப்பை விட அதிகம் ஆகிவிட்டதாலும், அதனை நிறுத்திவிட மைய வங்கி அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.

பெருமையாக இருந்த கால் ரூபாய் பணம்

“நான் இளைஞனாக இருந்த காலத்தில் கால் ரூவா பணம் என்பது உழைப்பாளியின் ஒரு நாள் ஊதியம்” என்று பேசத் தொடங்கினார் பிரபல ஓவியர் சந்தானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக