புதன், 16 பிப்ரவரி, 2011

தூத்துக்குடி, நாகர்கோவில், செங்கோட்டை, கோவைக்கு கோடைகால சிறப்பு இரயில்கள் இய‌க்க‌ம்!


கோடைக்காலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, கோவைக்கு கோடைக்கால சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு வாரந்தர சிறப்பு இரயில் (06037) மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது. இந்த இரயில் எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4ஆ‌‌ம் தேதி முதல் ‌ஜூன் 20ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு இரயில் (06038) ஏப்ரல் 5ஆ‌ம் தேதி முதல் ஜூன் 21ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06039) ஏப்ரல் 7ஆ‌ம் தேதி முதல் ‌ஜூன் 23ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 8ஆ‌ம் தேதி முதல் ஜூன் 24ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு இரயில் (06040) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06041) ஏப்ரல் 9ஆ‌ம் தேதி முதல் ‌ஜூன் 25ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 10ஆ‌ம் தேதி முதல் ஜூன் 26ஆ‌ம் தேதி வரை சிறப்பு இரயில் (06042) மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது.

கோவையில் இருந்து சென்னை சென்‌ட்ரலுக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06618) ஏப்ரல் 5ஆ‌ம் தேதி முதல் ஜூன் 28ஆ‌ம் தேதி வரை இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு கோவையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் சிறப்பு இரயில் (06617) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்‌ட்ரலை வந்தடைகிறது.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மயிலாடுதுறை வழியாக வாரந்தர சிறப்பு இரயில் (06802) ஏப்ரல் 6ஆ‌ம் தேதி முதல் ஜூன் 29ஆ‌ம் தேதி வரை இரவு 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 7ஆ‌ம் தேதி முதல் ஜூன் 30ஆ‌ம் தேதி வரை சிறப்பு இரயில் (06801) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை திருச்சியை 6 மணிக்கு சென்றடைகிறது.

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வாரந்தர அதிவிரைவு சிறப்பு இரயில் (06304) ஏப்ரல் 3ஆ‌ம் தேதி முதல் ஜூன் 26ஆ‌ம் தேதி வரை மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்தர சிறப்பு இரயில் (06303) மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

சென்னை சென்‌ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரந்தர ஏழைகள் ரதம் சிறப்பு இரயில் (06021) ஏப்ரல் 13ஆ‌ம் தேதி முதல் ஜூன் 22ஆ‌ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு இரயில் (06022) ஏப்ரல் 14ஆ‌ம் தேதி முதல் ஜூன் 23ஆ‌ம் தேதி வரை மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணிக்கு சென்டிரலை வந்தடைகிறது.

இந்த இரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக