திங்கள், 7 பிப்ரவரி, 2011

அளவுக்கதிகமான ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளால் செவிடாகும் சீனக் குழந்தைகள்!


ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்ட, மற்றும் முறையற்று பயன்படுத்திய வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் காது செவிடாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிறது நாளிதழ் ஒன்று.

இந்த நிலமைக்கு பெரும்பாலும் மருத்துவர்களே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மருத்துவர்கள் சாதாரண மாத்திரைகளில் சரி செய்ய வேண்டிய நோய்களுக்குக் கூட அதிக சக்தியுள்ள ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கொடுக்கின்றனர். இதன் மூலம் நோய் விரைவில் குணமடையும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது தவிர மருத்துவன் நிறுவனங்களுடன் 'டீல்' செய்து கொண்டும் மருத்துவர்கள் தேவைக்கு அதிகமாஅ மருந்துகளை எழுதி வருகின்றனர். என்று சீனாவில் உள்ள சமூகப் பணி ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

ஒவ்வொரு சீனரும் ஆண்டொன்றிற்கு 138 கிராம்கள் ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அமெரிக்காவின் தனி நபர் ஆன்ட்டி பயாடிக் நுகர்வைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக