ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

காதலர் தினம்: ஸ்ட்ராபெர்ரி விற்பனை அமோகம்!


ஷிம்லா: காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ட்ராபெர்ரி உற்பத்திக்கு பெயர் போன ஹிமாச்சல பிரதேசத்தில் ஸ்ட்ராபெர்ரி விற்பனை சூடுபிடித்துள்ளது.

இது குறித்து அம்மாநில பழ மொத்த வியாபாரி தாகூர் கூறியதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ட்ரெபெர்ரிக்கு ஏகக் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விவசாயிகளும் அறுவடையை வழக்கத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது தினமும் 250 கிராம் எடைகொண்ட ஸ்ட்ராபெர்ரி டிரேகள் 150 முதல் 200 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் வரை 50 முதல் 75 டிரேக்கள் தான் விற்பனையாகின. இவை குறிப்பாக சன்டிகர், பஞ்சாப் மற்றும் டெல்லியில் அமோக விற்பனையாகும். ஒரு டிரேயின் ரூ. 50-70 வரை விற்கப்படுகிறது என்றார்.

சுற்றுலாப் பயணிகளும், இளைஞர்களும் வரும் இடங்களில் தான் ஸ்ட்ராபெர்ரிக்கு அதிக கிராக்கி. அதனால் ஒரு டிரே ரூ. 100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படும். சமவெளிகளில் விளையும் ஸ்ட்ராபெர்ரியை விட மலைப்பகுதிகளில் விளைவதற்கு மவுசு அதிகம். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு அதிக கிராக்கி இருப்பதால் வியாபாரிகள் அதிக ஸ்ட்ராபெர்ரிகளை கொள்முதல் செய்கின்றனர் என்று பழ வியாபாரி ராஷித் முஹமது தெரிவித்ததார்.

பொதுவாக ஸ்ட்ராபெர்ரி மார்ச் மாத துவக்கத்தில் தான் மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் ஏற்கனவே பழங்களை மார்க்கெட்டுக்கு அனுப்பத் துவங்கி விட்டனர். கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் 500 குவிண்டால் ஸ்ட்ராபெர்ரி உற்பத்தி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக