வியாழன், 16 டிசம்பர், 2010

4 கி.மீ. பரப்பிற்கு உருகியுள்ள அர்ஜென்டீனா பனிமலை!


அர்ஜென்டீனாவில் உள்ள அமீகினோ என்ற பனிமலை கடந்த 80 ஆண்டுகளில் புவிவெப்பமடைதல் காரணமாக சுமார் 4.கிமீ பரப்பளவிற்கு உருகியுள்ளதாக கிரீன்பீஸ் சுற்றுசூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நடப்பு ஆண்டு மார்ச்சில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர் கீரீன்பீஸ் இயக்கத்தினர்.

மேலும் ஆண்டீஸ் மலைத்தொடர் சங்கிலி முழுதிலுமே புவிவெப்பமடைதலின் விளைவாக பனிச்சிகரங்களில் பனி உருகிவருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டீனாவின் பனி மற்றும் பனிமலை ஆய்வுக்குழுவுடன் கிரீன்பீஸ் இயக்கத்தினர் இந்தப் பனிமலைப்பகுதிக்கு நேரடியாகச் சென்றுள்ளனர்.

1931ஆம் ஆண்டு இதெ பகுதியை புகைப்படம் எடுத்தவர் ஆல்பர்ட்டோ அகஸ்டினி என்பவர் குறிப்பிடத்தக்கது.

தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பனிமலைக்கு முன்பாக ஒரு பெரிய ஏரி உருவாகியுள்ளது. இது பழைய புகைப்படங்களில் இல்லை.

புவிவெப்பமடைதல் காரணமாக் உலகின் முக்கியப் பனிமலைப்பிரதேசங்களில் பனி உருகிவருவதன் வேகம் அதிகரித்துள்ளது இதற்கு தென் அமெரிக்கப் பனிமலைகளும் விதிவிலக்கல்ல என்று கிரீன் பீஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

தெற்கு படகோனிய பனிப்புலத்தின் ஒரு பகுதிதான் அமீகினோ பனிமலையும். படகோனிய பனிப்புலத்தில் 13 மிகப்பெரிய பனிமலைகளும் 190 சிறு பனிமலைகளும் உள்ளன.

இவை அனைத்திலுமே ஏறக்குறைய புவிவெப்பமடைதலின் விளைவுகள் தாக்கம் செலுத்தியுள்ளதாக கிரீன்பீஸ் இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக