வியாழன், 16 டிசம்பர், 2010

யு ட்யூபுக்காக வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் கூகுள்!


யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.

தொழில்முறை நிறுவனம் மூலம் ஒருஜினல் வீடியோக்களை உருவாக்கி அவற்றை ட்யூப்பில் ஒளிபரப்பும் முயற்சியில் மும்முரமாக உள்ளது கூகுள். இதன் முதல் முயற்சியாக நெக்ஸ்ட் நியூ நெட்வொர்க் எனும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

புதிய குறும்படங்கள், திரைப்படங்களையும் கூட யு ட்யூபில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம். இதன் மூலம் அதிக விளம்பர வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூகுள் கருதுகிறது.

யு ட்யூபுக்காக கூகுள் வாங்கும் முதல் நிறுவனம் இது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக