ஞாயிறு, 6 ஜூன், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு 1000 சிறப்பு பஸ்கள்!

கோவை: கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு 1000 சிறப்பு பேருந்துகள் விடப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரும், ஊர்வலக்குழு தலைவருமான கே.என்.நேரு கூஙறியுள்ளார்.

கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், ஊர்வலத்தை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் கண்டு களிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் வழக்கமான கட்டணத்தில் இயங்கும்.

இது தவிர கோவையை சுற்றி 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். வெளிïர்களில் இருந்து வரும் பஸ்கள் அந்த பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும். பின்னர் அவைகள் அங்கிருந்து புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து கொடிசியாவில் நடைபெறும் மாநாட்டு திடலுக்கு சென்று, வருவதற்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இந்த பஸ்களுக்கு இலவச கட்டணம், சலுகை கட்டணம் கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரத்து 275 பஸ்கள் உள்ளன. அதில் சுமார் ரூ. 2500 கோடி செலவில் 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தேவைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டு வருகிறது. ஆகவே மேலும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடுவதற்கோ, இருக்கிற வழித்தடத்தை நீடிப்பதற்கோ எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக