செவ்வாய், 29 ஜூன், 2010

விமான தயாரிப்புத் துறையில் நுழையும் மஹிந்திரா!


பெங்களூர்: இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விமானத் தயாரிப்புத் துறையில் நுழைகிறது.

இதற்காக முதல்கட்டமாக ரூ. 250 கோடியை அந்த நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிப்ஸ்லேண்ட் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஏரோஸ்டாஃப் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது.
இது குறித்து பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அந்த நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் [^] ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், முதல்கட்டமாக விமான உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு ரூ. 150 கோடியும் விமானத் தயாரிப்பு தொடர்பான பணிக்கு ரூ. 100 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் விமான துறையில் முழு கவனம் செலுத்துவோம். பயணிகள் விமானம் [^] மற்றும் போர் விமான தயாரிப்புகளில் இறங்க திட்டமிட்டுள்ளோம்.

இப்போது விமானத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறையில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்றார்.

பெங்களூர் அருகே மாலூரில் மஹிந்திரா நிறுவனத்துக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு விமான உதிரிப் பாக தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக