திங்கள், 28 ஜூன், 2010

வ‌ணிக‌ம்!

டாலருக்கு நிகர் ரூபாய் மதிப்பு உயர்வு!
வங்கிகளுக்கு இடையிலான அன்னியச் செலாவணிச் சந்தை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தது.

டாலர் ஒன்றுக்கு ரூபாய் 46.10 ஆகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை இறுதி நிலவரப்படி இது ரூ.46.28/29ஆக இருந்தது.

அயல்நாட்டிலிருந்து பங்குச் சந்தைக்கு முதலீடுவரத்து அதிகரிப்பால் ரூபாய் மதிப்பு உயர்ந்தது என்று அன்னியச் செலாவணிச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.ஐ உரிமை பங்கு வெளியிட திட்டம்!
பாரத ஸ்டேட் வங்கி உரிமை பங்குளை வெளியிட்டு இந்த நிதி ஆண்டிக்கள் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

புது டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பில் பங்கேற்க வந்த ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் உரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த நிதி ஆண்டின் கடைசி மாதங்களில் உரிமை பங்கு வெளியிடப்படும்.

வங்கியின் பணப்புழக்கத்தை பொருத்த வரை, ஜுன் மாதத்தில் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் 3 ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அகண்ட அலைவரிசையின் ஏலமும், வரவிருக்கும் வயர்லெஸ் அகண்ட அலைவரிசையின் ஏலமுமே காரணம். அதே நேரத்தில் அடுத்த மாதம் வங்கியின் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஓ.பி.பட் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக