செவ்வாய், 22 ஜூன், 2010

இந்தியாவில் மது விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு!


டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம்.

குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர்.

பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம்.

எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடிப்பழக்கம், எந்த மது பானத்தை மக்கள்தேர்வு செய்கிறார்கள், எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள், இந்த எண்ணிக்கை இப்போது எப்படி உள்ளது, இது எதிர்காலத்தில் எப்படி உயரும் என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த சர்வதேச ஒயின் மற்றும் மது ஆவண நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி, இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி கேஸ் (அதாவது அட்டைப் பெட்டி- ஒரு பெட்டியில் 12 மது பாட்டில்கள்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் கேஸ் மது விற்பனையாகுமாம். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் விற்பனையாகும் மது வகைகளில் விஸ்கிக்குத்தான் முதலிடம். அதாவது விற்பனையில் பாதியை விஸ்கியே குடித்து விடுகிறதாம். கடந்த ஆண்டு 119 மில்லியன் கேஸ் விஸ்கி விற்பனையானதாம். இது இந்த ஆண்டு 131 மில்லியன் கேஸ் ஆக எகிருமாம்.

ரம் விற்பனையப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு 39 மில்லியன் கேஸ் ஆக இருந்தது. நடப்பாண்டில் 42.4 சதவீத உயர்வு இருக்குமாம்.

பீர் விற்பனையில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை. அதுவும் இப்போது நாட்டின் பல பகுதிகளில் இன்னும் வெயில் காலமாக இருப்பதால் அது நல்ல நிலையிலேயே விற்று வருகிறதாம். கடந்த ஆண்டு 1 கோடியே 41 லட்சம் லிட்டர் பீரை குடிமக்கள் குடித்துள்ளனர். இது நடப்பாண்டில் 1 கோடியே 52 லட்சம் லிட்டர் பீராக உயருமாம்.

என்னதான் வெளிநாட்டு சரக்குகள் இந்திய மது பான சந்தையில் தள்ளாட்டம் போட்டாலும், லோக்கல் சரக்குகள்தான் துள்ளாட்டம் போட்டு நல்ல விற்பனையைக் கண்டு வருகிறதாம். அதிலும் விஜய் [^] மல்லையாவின் யுபி நிறுவனத் தயாரிப்புகளான மெக்டோவெல், பேக்பைப்பர் ஆகிய இரு வகைகளும் செமத்தியான விற்பனையை கொடுக்கிறதாம்.

சியர்ஸ்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக