செவ்வாய், 29 ஜூன், 2010

ஜார்ஜ் கோட்டை: நூலகமான பழைய சட்டசபை கூடம்!


சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய சட்டசபை கூடத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பேசிய முதல்வர் [^] கருணாநிதி [^], சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படும். முதல்வராக நான் பணியாற்றிய அலுவலகம் செம்மொழி நிறுவன தலைவரின் அலுவலகமாக செயல்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து கோட்டையை செம்மொழி அலுவலகமாக மாற்றும் ஏற்பாடுகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளன.

முதல்கட்டமாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய சட்டசபை கூடத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் சங்கத் தமிழ் இலக்கியங்கள், வரலாறு, அகராதி போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோட்டையில் தான் அரசு அமையும், புதிய சட்டசபை கட்டடத்தில் ஆட்சி அமைக்க மாட்டேன் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா [^] அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கோட்டையை செம்மொழி நூலகம் ஆக்கும் பணிகள் படு வேகத்தில் நடந்து முடிந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக