வெள்ளி, 18 ஜூன், 2010

டென்மார்க் நிறுவனம் புதுமை ‘காதல் இருக்கைÕ பேருந்தில் கலக்கல்


கோபன்ஹேகன்: காதலர் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறீர்களா? இனி பேருந்திலும் காதலரை கண்டுபிடிக்கலாம். ஆம், டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் செயல்பட்டு வரும் அரீவா பேருந்து நிறுவனம் Ôகாதல் இருக்கைÕ என்ற பெயரில் 2 இருக்கைகளை ஒவ்வொரு பஸ்சிலும் ஒதுக்கி உள்ளது.
காதலரை தேடும் ஆணோ, பெண்ணோ அதில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். துணையைத் தேடும் மற்றொருவர் அந்த இருக்கையில் உட்கார்ந்திருப்பவரை பிடித்திருந்தால் அவருடன் போய் உட்கார்ந்து கொள்ளலாம். பிறகு காதல் பாடத்தை தொடங்க வேண்டியதுதான்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்டின் வெக்ஸ் கூறியதாவது:
நாங்கள் இயக்கும் பேருந்துகளில் 103ல் காதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கலரில் காதல் சின்னமான இதயம் வரையப்பட்ட இரண்டு சீட்டுகள் பஸ்சின் முன்பகுதியில் இருக்கும். துணையை தேடும் இளசுகள் இதில் அமரலாம். பயணிகளை குஷிப்படுத்தவே இந்த ஏற்பாடு செய்துள்ளோம். எனினும், இதில் அமரும் அனைவருக்கும் காதல் நண்பர் கிடைப்பார் என்று உறுதியாக கூற முடியாது. மற்றவர்களின் இதயங்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம்.
இந்த இருக்கை அமைக்கப்பட்டு இரண்டு வாரம் ஆகி உள்ள நிலையில், இதில் சில இளம் பெண்கள் புன்னகையுடன் வந்து உட்காருவதாக பேருந்து டிரைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என நம்புகிறோம்.
இந்த காதல் இருக்கைகள், பயணிகளிடையே நல்லுறவை வளர்க்க உதவுவதுடன், காரில் பயணம் செய்பவர்களை பேருந்தில் பயணிக்க தூண்டுவதாகவும் அமையும் என்று கருதுகிறோம். மொத்தத்தில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக