செவ்வாய், 22 ஜூன், 2010

தமிழ் இணைய மாநாடு கண்காட்சி அரங்கம்(படம்)


உலகத்தமிழ்செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. இதை முன்னியிட்டு ஜனாதிபதி பிரதீபா இன்று கோவை வருகிறார். ஜனாதிபதி நாளை மாநாட்டை துவங்கிவைக்கிறார்.

இம்மாநாட்டையொட்டி தமிழ் இணைய மாநாடு கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது.

அமைக்கப்பட்டுள்ள அக்கண்காட்சி அரங்கத்தை மாநாட்டிற்கு வந்திருப்போர் வியந்து ரசிக்கின்றனர்.

செம்மொழி: இன்று கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை கோவையில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று கவிஞர் வைரமுத்து தொலைக்காட்சியில் சிறப்புரையாற்றுகிறார்.

இது குறித்து சென்னை தொலைக்காட்சி நிலையம் செய்திப் பிரிவு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

’’தூர்தர்ஷன் சென்னை மண்டல செய்திப்பிரிவு வழங்கும் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு நிகழ்ச்சியில் இன்று இரவு 8.15 மணிக்கு கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.


முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப்பணி, திரைப்பட பாடல்களில் சங்க இலக்கியங்களின் தாக்கம், இலக்கிய - இலக்கண வரம்புகள் இல்லாமல் எழுதப்படும் கவிதைகள், தமிழ்மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து அவர் பேசுகிறார்’’என்று கூறப்பட்டுள்ளது.

தமிழில் படித்து விஞ்ஞானிகளான 30 பேர் பங்கேற்பு

தமிழ் வழியில் படித்து விஞ்ஞானிகளான 30 பேர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்று சந்திரயாண் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

இதுகுறித்து கோவையில் அவர் மேலும் கூறியதாவது,

உலகமே கண்டு வியக்கும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பண்டைய கால பொருட்கள், இலக்கிய காட்சிகள் இடம் பெறுகின்றன. அத்துடன் விண்வெளி ஆய்வு தொடர்பான அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் இலக்கியத்தில் மட்டுமன்றி தொழில்நுட்பத்திலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக விண்வெளி ஆய்வு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் படித்தால்தான் அறிவியலில் சிறப்பாக சிந்திக்க முடியும். தாய்மொழியில் படித்தால்தான் சுயசிந்தனை அதிகரிக்கும் என்றார்.

கோவை மாநாட்டில் படுகர் இன மக்களின் நடனம்

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் படுகர் இன மக்களின் கலாச்சார நடனம் இடம் பெறுகிறது என்று மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புதுறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

கோவையில் வருகிற 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. 23 ஆம் தேதி கோவையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும், நடனமும் நடைபெறு கின்றன. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் இடம் பெறுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆ. இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நீலகிரி படுகர் இன மக்களின் படுகர் கலாச்சார நடனம் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இடம் பெறுகிறது. இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு, ஒத்திகையும் முடிக்கப்பட்டு நடன குழுவினர் தயாராக இருக்கின்றனர் என்றார்.

இன்டர்நெட் பாமரனையும் அடைய வேண்டும்: கனிமொழி

செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் இணையதள மாநாட்டின் வாயிலாக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், இன்டர்நெட்டின் பயன்களை பாமர மக்களும் அறியும்படி செய்ய வேண்டும், என்று கனிமொழி எம்.பி., கூறினார்.


கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இணையதள மாநாடும் நடத்தப்படவுள்ளது. இணையதள மாநாட்டில் பங்கேற்கவும், அதையொட்டி நடைபெறும் கண்காட்சியை பார்வையிடவும் வருபவர்களைக் கையாள்வது குறித்து கனிமொழி எம்.பி., தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் டேவிதார், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மாணவ ஆர்வலர்களிடம் விளக்கினர்.


அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது, இதுவரை எட்டு இணையதள மாநாடுகள் நடைபெற்றுள்ளன. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது இணையதள மாநாடு நடைபெறுவது சிறப்பானது.


இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் நாம் முன்னேறியவர்களாக உள்ளோம். இத்துறையின் பயன்கள் அனைவரையும் சென்றடைய, மாணவர்கள் உதவ வேண்டும். மாநாட்டில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு, கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம்.


அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சல் அடையாமல், பொறுமையுடன் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். இம்மாநாட்டின் வாயிலாக இன்டர்நெட், தகவல் தொழில் நுட்பத்தின் பயன்கள் பாமர மக்களை சென்றடையச் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் தெரியாத எவரையும் கிண்டல் செய்து விடக்கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக