செவ்வாய், 22 ஜூன், 2010
ஐசிஐசிஐ வங்கியுடன் பாங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைந்தது.
ஐசிஐசிஐ வங்கியுடன் பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கி இணைவதற்கான ஒப்புதலை ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு பொதுக் குழு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலம் பரோடா நகரில் நடந்த ஐசிஐசிஐ வங்கியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் அனைவரும் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியதாக அந்த வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கியின் 119 சம ஒப்பு பங்குகளுக்கு 25 ஐசிஐசிஐ சம ஒப்புப் பங்குகள் என்ற சமன்பாட்டில், பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கியின் பங்குதாரர்களுக்கு பங்குகள் வழங்கப்படும் என்று ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.
இந்த இணைப்பிற்கு பாங்க் ஆஃப் ராஜஸ்தானின் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமின்றி, அவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் பணி நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இந்த இணைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததையடுத்த அதன் சிறப்பு பொதுக் குழுக் கூடி இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக