வெள்ளி, 30 ஜூலை, 2010

சென்னையில் லேப்டாப் விற்பனை 173% அதிகரிப்பு!


டெல்லி: இந்தியாவில் 2009-10ம் நிதியாண்டில் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் லேப்டாப்கள் விற்பனை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 25.08 லட்சம் லேப்டாப்கள் விற்றுள்ளன.

சென்னை, மும்பை [^], டெல்லி [^], கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் இதன் விற்பனை 173 சதவீதம் அதிகரித்துள்ளது.

கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை 55.26 லட்சம் விற்பனையாகியுள்ளன.

அதே போல லேசர் பிரிண்டர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் பிரிண்டர்கள் விற்பனை 6 சதவீதம் அதிகரித்து 17.20 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

மேலும் யு.பி.எஸ். விற்பனையும் 53 சதவீதம் உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக