திங்கள், 5 ஜூலை, 2010

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா கோவை செம்மொழி மாநாட்டுப் பந்தல்?


கோவை: கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கா அமைக்கப்பட்ட பந்தல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது.

மாநாட்டுத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாவுக்காக கோவை கொடிசியா அரங்கின் முன்பகுதியில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. இதில் நடந்த கருத்தரங்குகள், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்த்தனர்.

4.5 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்ட இந்தப் பந்தலில் 60,000 பேர் அமரவும், 1 லட்சம் பேர் நின்று நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் வசதியாக அமைக்கப்பட்டது.

400 பேர் 45 நாட்கள் இரவு பகலாக பாடுபட்டு இந்தப் பந்தலை அமைத்தனர்.

இந்தப் பந்தல் தான் உலகிலேயே அமைக்கப்பட்ட மிகப் பெரிய பந்தல் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து இதை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய தஞ்சாவூரைச் சேர்ந்த பந்தல் அமைப்பு [^] நிர்வாகம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக