வியாழன், 1 ஜூலை, 2010

ஷாப்பிங் போறீங்களா, உஷார்!


ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பார்ட்டன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.

இதை ஒரு ஆராய்ச்சி மூலம் நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடைக்குப் போய் சாமான் வாங்கப் போனால் எப்படி மலட்டுத்தன்மை வரும் என்று கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் தெரிய தொடர்ந்து படியுங்கள்.

வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது அங்குள்ள கேஷ் கவுன்டர்களில் தரப்படும் ரசீதுகளில், அதாவது அந்தத் தாள்களில் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A (BPA) என்ற ஆபத்தான பொருள் அடங்கியிருக்குமாம். அதை தொடும் ஆண்களுக்கு (பெரும்பாலும் பொருட்களை பெண்கள் [^] வாங்கினாலும், பர்ஸைப் பறி கொடுக்கும் பொறுப்பு ஆண்களுக்குத்தானே வந்து சேருகிறது!) அந்த பொருள் நமது உடல்மூலமாக ஊடுறுவி, நமது செக்ஸ் ஹார்மோன்களை செயலிழக்க வைத்து விடுமாம்.

இந்த வேதிப் பொருளை பிரின்டர்களில் பயன்படுத்தப்படும் மையில் கலநது விடுகிறார்கள். அதாவது பளிச்சென எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிபிஏவை மையில் கலக்கிறார்கள். ஆனால் இது ஆண்களின் பர்ஸை மட்டுமல்ல, எல்லாவற்றையும் காலி செய்து விடும் ஆபத்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்த வேதிப் பொருள் அடங்கிய ரசீதை வாயில் வைப்பது, கையால் தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமாக நமது உடலுக்குள் இது போகிறதாம்.

இதுகுறித்து பெர்லினைச் சேர்ந்த பிராங் சோமர் என்பவர் கூறுகையில், இது ஆண்களின் செக்ஸ் ஹார்ன்மோன்களை காலி செய்து விடும் சக்தி படைத்தது.

ஷாப்பிங் செல்லும் பழக்கம் அதிகம் உடைய ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எழுச்சியின்மை, விறைப்புத்தன்மை குறைவு போன்றவற்றுக்கும் இது இட்டுச் செல்லும்.

இது மட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் கூட வரும் வாய்ப்பு உள்ளது. இந்த வேதிப் பொருளுக்கு அமெரிக்கா [^], கனடாவில் தடை [^] செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனவே ஆண்குலமே, ஷாப்பிங் போகும்போது ரொம்பக் கவனம். இல்லாவிட்டால் இழக்க நேரிடும் - பணத்தோடு, ஆண் குணத்தையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக