வெள்ளி, 2 ஜூலை, 2010

பன்னா சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் கண்டெடுப்பு!


மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா வைர சுரங்கத்தில் மிகப் பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்படுள்ளது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும் என்று தேச கனிம மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

“2005ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டதை விட மிகப் பெரிய, இதுவரை இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரிய வைரம் இது. அளவில் மட்டுமின்றி, தரத்திலும் மிகச் சிறந்ததாக உள்ளது” என்று கூறிய தே.க.மே.கழக்கத்தின் திட்ட மேலாளர் சி.இ. கிந்தோ, அதனை 34.37 காரட் வைரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

65 ஆண்டுக்கால வைர சுரங்க கண்டெடுப்புக்களில் இதுவே மிகப் பெரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரம் விரைவில் ஏலத்திற்கு வரும் என்று கூறியுள்ளனர்.

பன்னா வைர சுரங்கம், தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க சுரங்கமே உலகின் பல பெரிய வைரங்களை கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக