சனி, 10 ஜூலை, 2010

தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை-தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம்!

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடத் திட்டத்தில், இந்தக் கல்விஆண்டு முதல், பி.ஏ.தமிழ் மற்றும் எம்.ஏ. தமிழ் படிப்பவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 25 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து,தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கூறுகையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தீர்மானப்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், தமிழ் ஆயத்த படிப்பு பாடத்தில், உயர் தனிச் செம்மொழி என்றத் தலைப்பில் செம்மொழி குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கல்விஆண்டு முதல்(2010-11), பி.ஏ.தமிழ் மற்றும் எம்.ஏ. தமிழ் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு, கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

ஒரு முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் [^], அத்துடன் ஒரு பட்டயப் படிப்பையும் சேர்த்துப் படித்தால், அந்தப் பட்டயப் படிப்புக்கு 50 சதவீதம் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், இரண்டு விதமான படிப்புகள் உள்ளன. ஒன்று, முறையாக எஸ்.எஸ்.எல்.சி.+2 படித்தவர்கள் பட்டப்படிப்பை இங்கு படிப்பது. இந்த படிப்பு படித்தால் உலகம் முழுவதும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செல்லுபடியாகும்.

ஆனால், +2 படிக்காமல் பட்டப்படிப்பை நேரடியாக படித்தால் அது வேலை வாய்ப்புக்கு செல்லுபடியாது. அந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்கள் அனைத்தும் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில் நடவடிக்கை [^] எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக