சனி, 10 ஜூலை, 2010
மதுபானமும் அரசும்!
2003 நவம்பரில் மதுபானங்களை டாஸ்மக் கடைகள் மூலம் விற்பனை செய்வது என்று அப்போதைய அரசு முடிவு செய்தது; இதனால் அரசுக்கு 2004-2005 நிதியாண்டில் ரூ 4872 கோடி வருமானமாய் கிடைத்தது; இந்த வருமானம் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
கடந்த நிதியாண்டில் (2009-2010 )டாஸ்மாக் முலம் அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ 12492 கோடி.இது அதற்கு முந்தைய நிதியாண்டை ( 2008-2009 ) விட ரூ 1889 கோடி அதிகம்.
இது அல்லாமல், 'பார்' களை ஏலம் விடுதல்,கால் பாட்டில்கள் அட்டைப் பெட்டிகளை ஏலம் விடுதல் போன்றவற்றின் மூலமாக கூடுதலாக ரூ 500 கோடி வரை வருமானம் கிடைக்கிறது.
ம்துபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் இந்த அபரிமிதமான வருமானத்தின் மூலமே அரசு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மற்று பல்வேறு இலவசத் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக