புதன், 14 ஜூலை, 2010

சன் டிவி-நெட்வோர்க் 18 கைகோர்ப்பு!


டெல்லி: சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சி உள்பட பல்வேறு சேனல்களை உள்ளடக்கிய நெட்வோர்க் 18 நிறுவனத்துடன் சன் நெட்வார்க் கைகோர்த்துள்ளது.

இரண்டும் இணைந்து 'சன் 18' என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியா முழுவதும் கேபிள்கள், டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ், எம்எம்டிஎஸ் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்நுட்பங்கள் மூலமும் தங்களது சேனல்களை வினியோகிக்கவுள்ளன.

இந்த இரு நிறுவனங்களிடமும் சேர்த்து மொத்தம் 33 சேனல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மிக அதிகமாக சேனல்களை வழங்கும் தொலைக்காட்சி கூட்டமைப்பாக சன் 18 உருவெடுத்துள்ளது.

இதன்மூலம் நெட்வோர்க் 18 முதன்முறையாக தொலைக்காட்சி அலைவரிசை வினியோகத்தில் கால் பதிக்கிறது. இதுவரை இந்த நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே நடத்தி வந்தது.

இப்போது சன் டிவியின் உதவியோடு கேபிள் டிவி நெட்வோர்க், டிடிஎச் உள்ளிட்ட சேவைகளில் நெட்வோர்க் 18 இறங்குகிறது.

இந்த சன் 18 நிறுவனம் Sun18 Media Services North Co, Sun18 Media Services South Co என இரு துணை நிறுவனங்களைக் கொண்டதாக இருக்கும்.

இதன் வடக்கு பிராந்திய நி்ர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஹரேஸ் சாவ்லாவும், தென் பிராந்திய தலைமை அதிகாரியாக டோனி டிசில்வாவும் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக