செவ்வாய், 27 ஜூலை, 2010
'அணில்' பீர், 'சீ'யர்ஸ்!
சிங்கம் மார்க் பீர் சாப்பிட்டிருப்பீர்கள். கிங்பிஷர் பீர் கூட சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அணில் பீர் சாப்பிட்டிருக்கிறீர்களா?. 'ஜஸ்ட்' 765 டாலரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பீர் அணில் உள்ளிட்ட இறந்த விலங்குளின் உடலிலிருந்து உருவாக்கப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டால் உள்ளே போன பீர் வாந்தி ரூபத்தில் வெளியே வரக் கூடும்.
ஆனால் இது நிஜம். என்ன, நம்ம நாட்டில் இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அதனால் தைரியமாக இந்த செய்தியை தொடர்ந்து படிக்கலாம்.
இந்த விலை உயர்ந்த அணில் பீர், அணிலின் உடலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் 55 சதவீத ஆல்கஹால் இருக்குமாம். இதனால் போதை நிறைய இருக்கும்.
இதுகுறித்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பீர் தயாரிப்பு நிறுவனமான ப்ரூடாக் கூறுகையில், உலகின் மிகவும் விலை உயர்ந்த, அதிர்ச்சிகரமான, அதேசமயம் வினோதமான பீர் இதுதான்.
முதல் கட்டமாக 12 பாட்டில் பீர் மட்டுமே தயாரித்துள்ளோம். அத்தனையும் விற்றுப் போய் விட்டது. அமெரிக்கா, கனடா, இத்தாலி, டென்மார்க், ஸ்காட்லாந்து, இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் இதை வாங்கியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு பார்சல் செய்து அனுப்பவுள்ளோம் என்றனர்.
அணில்கள், கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகளின் உடலிலிருந்து இந்த பீரைத் தயாரித்துள்ளனராம். அனைத்துமே ஏற்கனவே இறந்தவை என்று ப்ரூடாக் நிறுவன இணை நிறுவனர் ஜேம்ஸ் வாட் கூறுகிறார்.
வாந்தி வருவது போல இருக்கிறதா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக