வியாழன், 15 ஜூலை, 2010
ஏரியில் நீர் வற்றுகிறது-மூடப்படுகிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!
வேடந்தாங்கல்: காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் சீசன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நாளையுடன் மூடப்படுகிறது. வட கிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னரே மீண்டும் அது திறக்கப்படும்.
வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் சீசனின்போது வருகை தருவது வழக்கம்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சீசன் இங்கு தொடங்கும். இந்த ஆண்டும் சீசன் நவம்பர் மாதம் தொடங்கியது. ஆஸ்திரேலியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 80, 000 பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்தன.
இவற்றை கிட்டத்தட்ட 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துச் சென்றனர். இந்த நிலையில் தற்போது வேடந்தாங்கல் ஏரியில்நீர் வற்றத்தொடங்கி விட்டது. இதையடுத்து அங்கு வந்திருந்த பறவைகள் கிளம்பிச் செல்ல தொடங்கி விட்டன.
இதைத் தொடர்ந்து நாளை முதல் பறவைகள் சரணாலயம் மூடப்படுகிறது. வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய பின்னரே மீண்டும் சரணாலயம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக