செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஆஸ்திரியா-ரூ. 1 கோடிக்கு ஏலம் போன ஹிட்லர் ஓவியங்கள்

வியன்னா: ஆஸ்திரியாவில் நடந்த ஏலத்தில் ரூ. 1 கோடிக்கு ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் போயின.

ஜெர்மனியை மட்டுமல்லாமல் யூத குலத்தையே நடுநடுங்க வைத்தவர் ஹிட்லர். 2ம் உலகப் போர் மூ்ள காரணகர்த்தா இவர்தான். மிகப் பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்தாலும் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்தவர் ஹிட்லர்.

கடந்த 1908ம் ஆண்டு ஹிட்லர் பல ஓவியங்களை தீடச்டியிருந்தார். சாதாரண வாட்டர்கலர் மூலம் பண்ணை நிலங்கள், தேவாலயங்கள், தொழிற்கூடங்கள், கிராமங்கள் [^], இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றை வரைந்து தள்ளியிருந்தார்.

அவற்றில் இரண்டு ஓவியங்களை வியன்னாவில் ஏலத்திற்கு விட்டனர். அவை இரண்டையும் ரூ.1 கோடிக்கு ஒரு வக்கீல் ஏலம் மூலம் பெற்றுள்ளார். அந்த வக்கீல் யார், எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக