வியாழன், 23 செப்டம்பர், 2010
பணக்கார அமெரிக்கர்கள்: ஆப்பிள் நிறுவன தலைவரை பின்தள்ளிய பேஸ்புக் நிறுவனர்!
போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார்.
இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் [^] ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் மீடியா பிரபலம் ஓப்ரா வின்பிரேயை விட சுகர்பெர்க் பெரும் பணக்காரராக இருக்கிறார். ஜாப்ஸ் 42வது இடத்திலும், வின்பிரே 103வது இடத்திலும் உள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக