புதன், 15 செப்டம்பர், 2010

டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி நபரும் மரணம்!


லண்டன்: டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியான மில்வினா டீன் என்ற பெண் இங்கிலாந்தில் தனது 97வது வயதில் மரணமடைந்தார்.

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து [^] சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் பனிபாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1,517 பேர் மரணமடைந்தனர். 706 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அவர்களில் ஒருவர் தான் மில்வினா டீன் என்ற பெண்மணி. அந்த கப்பலில் மில்வினா டீன் தனது தந்தை பெர்ட்ராம், தாயார் ஜார்கட்டா மற்றும் அண்ணன் பெர்ட் ஆகியோருடன் வந்திருந்தார்.

விபத்தில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். அப்போது இரண்டு மாத கை குழந்தையாக இருந்த மில்வினா டீன், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்து [^] டைட்டானிக் என்ற பெயரில் ஆங்கில படமாக எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதுகளை அள்ளி சென்றது. உலகம் முழுவதும் கோடி கணக்கில் வசூலை அள்ளி குவித்தது.

தற்போது விபத்து நடந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் மில்வினாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் [^] ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோருக்கு அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் 97 வயதான மில்வினா நேற்று முன்தினம் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். இது குறித்து சர்வதேச டைட்டானிக் சமுதாயம் என்ற அமைப்பின் தலைவர் [^] சார்ஸல் ஹாஸ் கூறுகையில், மில்வினா நகைச்சுவையான பெண்மணி. அன்பானவர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக