செவ்வாய், 21 செப்டம்பர், 2010

32 மாதங்களுக்குப் பிறகு 20000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!


மும்பை: உலக பொருளாதார மந்த காலகட்டத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பங்குச் சந்தை 20000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இன்றைய வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்குச் சந்தை 135 புள்ளிகள் உயர்ந்து 20041.52 ஆக நின்றது. அப்போது முதலீட்டாளர்களும் புரோக்கர்களும் மகிழ்ச்சியில் கைதட்டி மகிழந்தனர். மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெளியில் நின்றிருந்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் கை குலுக்கிக் கொண்டனர்.

சென்செக்ஸில்அனைத்துத் துறைப் பங்குகளும் இன்று 1.30 சதவீத வளர்ச்சியைக் கண்டன.

நாடு தழுவிய பங்குச் சந்தையான நிப்டியும் இன்று 6000 புள்ளிகளைக் கடந்தது. இன்று மட்டும் 36.40 புள்ளிகள் உயர்வு கண்டது நிப்டி.

32 மாதங்களுக்குப் பிறகு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இந்த உயர்வைக் கண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக