புதன், 15 செப்டம்பர், 2010

மணமகளை ரூ.30,000க்கு ஏலத்தில் எடுத்த மணமகன்: நரிக்குறவர்களின் வினோத திருமணம்!

ஆம்பூர்: நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த இளைஞர் தான் விரும்பிய பெண்ணை, ரூ. 30,000க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இவர்களுக்கு இன்று திருமணம் [^] நடைபெறுகிறது.

நரிக்குறவர் சமூகத்தினர் ஆம்பூரை அடுத்த சோளூரில் முகாமிட்டுள்ளனர். இங்கு வசிக்கும் டாலர்மணி என்பவரது மகள் ரூபினி (14). இவர் தன் குலத் தொழிலான பாசிமணியை விற்பவர்.

பள்ளிகொண்டா சந்தையில் பாசிமணி விற்றுக் கொண்டிருக்கையில் அங்கு தன்னைப் போன்று பாசிமணி விற்ற நரிக்குறவர் வந்தராஜா என்பவரின் மகன் திருமலையின்(15) மேல் காதல் [^] வயப்பட்டார் ரூபினி.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இனம் ஒன்றாக இருந்ததால் தடை ஏற்படவில்லை. ரூபினியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு திருமலை டாலர்மணியிடம் முறைப்படி பெண் கேட்டார். அவரும் இவர்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

இனி என்ன திருமணம் தான் என்று நினைத்தால் அது தவறு. ஏனென்றால், நரிக்குறவர் இனத்தில் திருமணம் முடிக்க வேண்டுமென்றால் மணமகன் தான் விரும்பும் பெண்ணை ஏலத்தில் எடுக்க வேண்டும். திருமலை தன் காதலியை ரூ. 30,000 கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.

இதையடுத்து இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி உற்றார் உறவினர் புடைசூழ நடந்தது. இன்று இவர்கள் திருமண பந்தத்தில் இணையவிருக்கின்றனர். மாப்பிள்ளை தாலி கட்டினால் மட்டும் போதாது. திருமண வைபவத்திற்கு வரும் அனைத்து பந்துக்களுக்கும் வயிறார விருந்து, மதுபானம், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 100 கொடுக்க வேண்டுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக