திங்கள், 11 அக்டோபர், 2010

ஏர் இந்தியாவுக்கு மேலும் ரூ 2000 கோடி வழங்கும் மத்திய அரசு!


டெல்லி: பெரும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மேலும் ரூ 2000 கோடியை வழங்குகிறது மத்திய அரசு. இந்த நிதி [^]யை பங்குகள் மூலம் வழங்குகிறது மத்திய அரசு.

இதன் மூலம் ஏர் இந்தியாவின் நிதி நிலையை மட்டுமல்லாது, கடன் பெறும் திறனையும் உயர்த்துகிறது மத்திய அரசு. நிதியை வழங்க மத்திய அரசின் முறையான ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன வங்கிகள்.

செயலர்கள் கமிட்டி ஏற்கெனவே ஏர் இந்தியாவுக்கு ரூ 5000 கோடி நிதியை உள்ளீடு செய்ய முடிவு செய்தது. இதில் முதல் தவணையாக ரூ 2000 கோடியை ஏர் வழங்க அனுமதியும் அளித்துவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ 800 கோடி கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டது. மீதித்தொகை இந்த ஆண்டு வழங்கப்படும்.

அடுத்து மேலும் ரூ 2000 கோடியை பங்குகள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் [^] ரூ 14000 கோடி நஷ்டம், ரூ 18000 கோடி மூலதன கடனில் உள்ளது. இவை தவிர, ரூ 50000 கோடிக்கு புதிய விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக