செவ்வாய், 19 அக்டோபர், 2010

காதலுக்கும், பாலுறவுக்கும் உள்ள தொடர்பு!


கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - திருக்குறள். இந்தக் குறளையே பின்னாளில் வந்த சினிமா பாடலாசிரியர்கள் பலவாறாக தங்களின் கற்பனை நயங்களைச் சேர்த்து பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். `கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று ஒரு கவிஞர் எழுதினார்.


சரி, இதையெல்லாம் ஏன், இப்போது குறிப்பிடுகிறோம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போது விடயத்திற்கு வருவோம். முந்தைய கட்டுரையில் திருமணமான தம்பதிகள், குறிப்பிட்ட இடைவெளியில் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொண்டால், கணவன்-மனைவி இடையேயான அன்பு மாறாமல் உறவு நீடிக்கும் என்று கூறியிருந்தோம்.


அந்தவகையில் காதலும், பாலுறவும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு நண்பர் காதல் பற்றி மிகக் கடுமையாக சாடினார். ``காதல் தெய்வீகமானது. காதலிக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதெல்லம் சுத்தப்பொய். காதல் என்பதே பாலுறவுடன் மறைமுகத் தொடர்பு உடையது'' என்று கூறினார்.



அதையெல்லாம் மறுத்து, அவருக்கு விளக்கம் கொடுத்த நிலையில், அவர் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு நம்மால் மறுத்துப் பதில் அளிக்க இயலவில்லை. ``காதலித்து திருமணம் முடிந்த பின் பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் யாரேனும் உண்டா?



காதலின் உச்சக்கட்டம் அல்லது எல்லை பாலுறவுப் புணர்ச்சிதானே?'' என்று வினவியதற்கு ஆம் என்ற பதிலைத் தவிர நம்மிடம் வேறு பதில் இல்லை. ``இளம் பருவத்தில், 20 - 30 வயதுகளில் காதலித்து திருமணம் முடித்து, குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பின், 10 ஆண்டுகளுக்குப் பின் யோசித்தால், தாங்கள் செய்தது சுத்த போலித்தனம் என்பதை உணர்வார்கள்'' என்று அந்த நண்பர் உறுதிபடக் கூறினார்.



நண்பர் கூறியதை சரி என ஆமோதிக்க முடியா விட்டாலும், அந்தக் கூற்றின் யதார்த்தத்தை அலசிப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக