திங்கள், 11 அக்டோபர், 2010

சச்சின் புதிய உலக சாதனை!


பெங்களூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.



உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். டெஸ்டில் அதிக ரன், சதம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார்.



தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை தொட்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

உலக அளவில் 14 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமை சச்சின் அடைந்துள்ளார். 27 வது ஓவரில் பவுண்ட்டரி அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.

170-வது டெஸ்டில் விளையாடி தெண்டுல்கர் 13,973 ரன் எடுத்திருந்தார். அதிகபட்ச ரன் 248 ஆகும். 48 சதமும், 57 அரை சதமும் அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்னை தொட்டார்.

அவருக்கு அடுத்தப் படியாக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 147 டெஸ்டில் 12,101 ரன்னும், லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 131 டெஸ்டில் 11,953 ரன்னும், ராகுல் டிராவிட் (இந்தியா) 143 டெஸ்டில் 11,580 ரன்னும், ஆலன்பார்டர் (ஆஸ்திரேலியா) 156 டெஸ்டில் 11,174 ரன்னும் எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக