திங்கள், 4 அக்டோபர், 2010

காப்புரிமை மீறல்... மோட்டரோலா மீது மைக்ரோசாப்ட் வழக்கு!


நியூயார்க்: ஆன்ட்ராய்ட் செல்போன்களின் காப்புரிமை தொடர்பாக மோட்டாரோலா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மைக்ரோசாப்ட்.

மொத்தம் 9 காப்புரிமைகளுக்கு உரிமை கோரி் மைக்ரோசாப்ட் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் ஹொராசியோ கடிரெஸ் கூறுகையில், "மோட்டாரோலாவின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் காலண்டர், இமெயில் சேவை, கான்டாக்ட்ஸ், மீட்டிங் ஷெட்யூல், சிக்னல் ஸ்ட்ரெங்த், பேட்டரி பவர் உள்ளிட்ட 9 வகைப் பயன்பாடுகள் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே சர்வதேச வர்த்தக ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்திலும் காப்புரிமை வழக்குத் தொடர்ந்துள்ளோம்" என்றார்.

இனி ஆன்ட்ராய்ட் போன்களில் தமது தொழில்நுட்பத்தை மோட்டரோலா பயன்படுத்த தடை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக