நாம் பேச்சு மொழியில் பல ஆங்கில வார்த்தைகளை எளிதாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதன் விரிவாக்கம் என்ன என்பதை அறிந்திருப்பது மிகச் சிலரே.
நாம் பயன்படுத்தும் சுருக்கமான வார்த்தையின் விரிவாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இது 3டி (முப்பரிமானம்) படம் என்போம். அது என்னவென்றால் 3 டைமன்சன் என்பதன் சுருக்கமாகும்.
காலை நேரத்தை ஏஎம் என்றும், இரவு நேரத்தை பிஎம் என்றும் கூறுவோம்.
ஏஎம் என்றால் ஆண்டி மெரிடியம் என்றும், பிஎம் என்றால் போஸ்ட் மெரிடியம் என்பதும் விரிவாக்கமாகும்.
கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் இமெயில். இமெயில் மூலம் மின்னஞ்சல் முகவரி உள்ள எவருக்கும் நாம் கடிதம் அனுப்பலாம். இதில் இ மெயில் என்பது எலக்ட்ரானிக் மெயில் என்பதன் சுருக்கமாகும்.
அதேப்போல, நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது, மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை டூ என்ற இடத்திலும், சிலரது முகவரியை சிசி என்ற இடத்திலும், ஒரு சிலரை பிசிசி என்ற இடத்திலும் போடுகிறோம்.
சிசி என்றால் என்ன? பிசிசி என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிசி என்றால் கார்பன் காபி என்று பொருள். இந்த முகவரியில் சேர்க்கப்படுபவர்களுக்கும், நாம் இன்னாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் சேர்க்கப்படுவதாகும்.
பிசிசி என்றால், பிளைன்ட் கார்பன் காபி என்று பொருள். பிசிசியில் சேர்க்கப்படும் முகவரி மற்றவருக்குத் தெரியாது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் பயன்படுத்தும் வார்த்தை ஏடிஎம் கார்ட் என்பதாகும். ஏடிஎம் என்றால் ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் என்பதாகும்.
செல்பேசியில் நாம் நண்பர்களுக்கு அனுப்பும் குறுந்தகவலான எஸ்எம்எஸ் என்பதற்கு ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் என்பதுதான் விரிவாக்கமாகும்.
நாம் வாய்க்கு வாய் சொல்லும் ஓகே என்பதன் விரிவாக்கம், ஆல் கரைக்ட் என்பதாகும்.
இதற்கு மேல் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளின் விரிவாக்கத்தை நீங்கள் சொல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக