புதன், 6 அக்டோபர், 2010
தீபாவளிப் பண்டிகையன்று இந்தியா வருகிறார் அதிபர் ஒபாமா!
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார்.
முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா்.
பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு அவருக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ஒபாமா உரை நிகழ்த்துகிறார்.
தனது இந்தியப் பயணத்தை அன்று முடிக்கும் ஒபாமா அங்கிருந்து இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஒபாமாவுடன் மனைவி மிச்சல் வருகிறார். ஆனால் மகள்கள் சாஷாவையும், மலியாவையும் அழைத்து வரவில்லையாம். அவர்களுக்கு ஸ்கூலில் லீவு கொடுக்கவில்லையாம், இதனால் அவர்களை விட்டு விட்டு ஒபாமா தம்பதி மட்டும் வருகிறார்களாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக