ஞாயிறு, 14 மார்ச், 2010

10 லட்சம் அளவைத் தொட்டது மாருதி உற்பத்தி - விற்பனை!


டெல்லி: ஆண்டுக்கு 10 லட்சம் அதாவது 1 மில்லியன் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கைத் தொட்டுள்ளது இந்தியாவின் முதல்நிலை கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி நிறுவனம். அந்த நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல்லாகும்.

மாருதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக 10 லட்சம் கார் உற்பத்தியளவையும், விற்பனை அளவையும் எட்டியுள்ளது மாருதி.

மாருதி நிறுவனம் ஒரு இந்திய அரசு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இதில் சுஸுகியும் ஒரு பங்குதாரராக இருந்தது. பின்னர் படிப்படியாக அரசு இந்த நிறுவனத்திலிருந்து விலகியது.

கடந்த ஏப்ரல் 09-பிப்ரவரி 10 காலகட்டத்தில் மாருதியின் உற்பத்தி அளவு 9.31 லட்சமாக இருந்தது. விற்பனையோ 9.23 லட்சமாக இருந்தது. இப்போது 10 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை வரும் மார்ச் 23-ம் தேதி பெரிய நிகழ்வாகக் கொண்டாடுகிறது மாருதி.

இந்த உற்பத்தி மற்றும் விற்பனை சாதனையின் மூலம் சர்வதேச அளவில் மில்லியன்களில் கார் உற்பத்தி செய்யும் டொயோட்டா, ஜிஎம், வோக்ஸ்வேகன், ஃபோர்டு மற்றும் ரெனல்ட் போன்ற கார் உற்பத்தியாளர்கள் வரிசையில் முதல் இந்திய நிறுவனமாக மாருதியும் இடம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக