புதன், 10 மார்ச், 2010
உண்ணும் பொருட்களில் அடங்கியிருப்பவை!
ஆப்பிளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியிருப்பதாக நாம் எண்ணுகிறோம். ஆனால், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வாழைப் பழமும் மற்ற எந்த பழத்திற்கும் குறைச்சல் ஆகாது.
விட்டமின் ஏ,பி,சி ஆகிய மூன்று விட்டமின்கள் அடங்கிய ஒரே பழம் வாழைப்பழம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மக்காச்சோளத்தை நீர் தெளித்துப் பொரித்தால் அதனை பாப்கார்ன் என்கிறோம். சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் நமது உணவு முறையில் இருந்து வருகிறது. பாப் கார்னில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
ஸ்ட்ராபெர்ரிப் பழத்தில் 20 விழுக்காடு அளவிற்கு பாலிக் ஆசிட் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும். ரத்த சோகையைத் தவிர்க்கும்.
ஆலிவ் பழங்கள் கசப்பாக இருக்கும். அவற்றின் கசப்புச் சுவையை நீக்க உப்புத் தண்ணீரில் ஊறப் போட வேண்டும். நாம் வாங்கும் ஆலிவ் எண்ணையுடன் பிமென்டோஸ் என்ற ஒரு பொருள் சேர்க்கப்பட்டு சுவை கூட்டப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக