வெள்ளி, 26 மார்ச், 2010

இந்தியாவில் பிரபலமாகும் கன்னித்தன்மை ஆபரேஷன்!


சென்னை: வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் கன்னித்தன்மை மீட்பு அறுவைச் சிகிச்சை இந்தியா விலும் தற்போது பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்களில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கன்னித்தன்மைக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அதை விட அதிக மரியாதை உண்டு. தான் காதலிக்கும், தான் மணக்க விரும்பும் பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிற நாடுகளை விட இந்தியாவில்தான் அதிகம்.

தற்போது இந்த எண்ணம் வெளிநாடுகளிலும் கூட பரவியுள்ளது. அங்குள்ள பெண்கள் கன்னித்தன்மையை மீண்டும் மீட்க அறுவைச் சிகிச்சை முறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பேஷன் இந்தியாவுக்கும் தொற்றி விட்டது.

பெரும்பாலும் நடுத்தர வயதுப் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷனை அதிகம் செய்து கொள்கிறார்களாம்.

வயது முதிர்ந்த பெண்கள் என்றில்லாமல் எதிர்பாராதவிதமாக கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டவர்கள் என சகல தரப்பினரும் இந்த ஆபரேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளனராம்.

இப்படித்தான் கன்னித்தன்மை இழப்பு ஏற்படும் என்று இல்லை. விளையாட்டுத் தறையில் இருப்பவர்களுக்கு கன்னித்தன்மை என்று கூறப்படும் ஹைமன் சவ்வுப் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்டவர்களும் கூட இந்த வகை ஆபரேஷன் மூலம் கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்.

ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் இந்த அறுவைச் சிகிச்ச பிளாஸ்டிக் சிகிச்சை போன்றதுதான். இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சை வசதிகள் தற்போது டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பல பிரபல மருத்துவமனைகள் என்றில்லாமல் நடுத்தர ரக மருத்துவமனைகளிலும் கூட இந்த ஆபரேஷன்களை செய்கிறார்கள்.

இதுதொடர்பாக பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் விளம்பரங்களும் செய்வது அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷன்களைச் செய்து கொள்ள அதிகம் வருகிறார்களாம். அந்த அளவுக்கு கலாச்சாரம் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இந்த வகை ஆபரேஷன்களுக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை ஆகுமாம். சாதாரண மருத்துவமனைகளில் அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவாகுமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக