திங்கள், 15 மார்ச், 2010

ஐ.பி.எல். கிரிக்கெட் மூலம் அரசுக்கு ரூ.200 கோடி வரிவருவாய்!


தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் 3-வது தொடர் மூலம் மத்திய அரசுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வரி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.

வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், உள்ளிட்ட பலரின் ஊதியங்களிலிருந்து டி.டீ.எஸ். வரி பிடிக்கப்படும் வகையில் ரூ.100 கோடியும், விளம்பரம், மார்கெட்டிங், ஆலோசனை சேவைகள் உள்ளிட்டதன் மீதான சேவை வரியாக ரூ.100 கோடியும் வரி வருவாயாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஐ.பி.எல். தொடரில் டி.டீ.எஸ். மூலம் ரூ.91 கோடி வரி வருவாய் கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மூலம் சில கோடிகள் வரு வருவாய் வசூலிக்கப்பட்டது.

மும்பை வருவாய் வரித்த் துறை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு வர்த்தக நிறுவனம் போன்று செயல் படுவதால் அதனை வருமான வரி வட்டத்திற்குள் கொண்டு வருவதாக அறிவித்ததையடுத்து இந்த ஆண்டு அதிக வரி வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக