ஞாயிறு, 21 மார்ச், 2010
2013-ல் இந்தியா சினிமா வர்த்தகம் ரூ.13 ஆயிரம் கோடியை தாண்டும்!
டெல்லி: இந்திய திரைப்படத் துறையின் உள்நாட்டு வர்த்தகம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.13 ஆயிரம் கோடி என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல சர்வதேச தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2008ம் ஆண்டில் இந்திய சினிமா வர்த்தகம் ரூ.8 ஆயிரத்து 130 கோடியாக இருந்தது.
இந்த வர்த்தக அளவு, ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் அதாவது 2008-2013 காலகட்டத்தில் 11.5 சதவிகிதமாக இந்த உயர்வு இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.
மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் மற்றும் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாமல் சராசரியான கட்டணங்கள் அடிப்படையில் கணக்கிட்டாலும், வரும் 2013ம் ஆண்டில் இந்திய சினிமா வர்த்தகம் 13 ஆயிரம் கோடி ரூபாயை தொடும் என்பது உறுதி என அந்நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக